Wednesday, January 9, 2013

 

தீர்க்க தரிசி எரிக்

எரிக் ஜான் ஹனுசென் 1889 இல் யூத தந்தைக்கு பிறந்த இவரின் உண்மையான பெயர் ஹெர்மான் ஸ்டெய்ன்நேடர், இவருடைய தந்தை ஒரு நாடக நடிகரும் கூடுதலாக யூத ஆலயத்தை கவனிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார் .பள்ளி கல்வியை கைவிட்ட எரிக் சர்க்கஸில் இணைத்து கத்தி எறிவது, நெருப்பினை உண்பது போன்ற சர்க்கஸ் சாகசங்களை நன்கு கற்று தேறினார்.
முதலாம் உலக போரில் படை வீரனாக இருந்த எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய சக்திகளை செய்து காட்ட தொடங்கினார். ஒரு கட்டத்தில் எரிக்கின் குழாமிற்கு நீர் தட்டுபாடு ஏற்பட்ட பொது அனைவரும் நம்பிக்கை இழந்த தருணத்தில் எந்த உபகரணங்களும் மந்திரகோலும் இன்றி தனது நண்பர்களுக்கு நீரினை வரவழைத்தார் எரிக் ,எரிக்கின் அசாத்திய ஆற்றலும், அனைவரையும் கவரும் தோற்றமும், அவரை சாதாரண சிப்பாய் என்ற நிலையில் இருந்து படை வீரர்கள் கூட்டத்தின் முன் நிகழ்ச்சிகளை செய்து காட்டும் அளவு உயரத்தில் ஏற்றி விட்டது.

போர் முடிந்த பின்னர் எரிக் தனது தூரத்ருஷ்டி(clairvoyance ) ,அடுத்தவரின் மனதில் உள்ளதை அப்படியே படித்து காட்டுவது (mind reader ),போன்ற சக்திகளை மேலும் வளர்த்து கொண்டு ஜெர்மன் அதனை சுற்றி உள்ள தேசத்திலும் தனது அபூர்வ சக்தியை பற்றிய நிகழ்வுகளை நடத்தி கொண்டு வந்த போது ,ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அவரை மேலும் சிக்கலிலும் ஆழ்த்தியது .ஆனாலும் மேலும் பிரபல்யமாகவும் செய்தது.

ஆம்., ஒரு கொலையை பற்றி தனது நிகழ்ச்சியில் அத்தனை செய்திகளையும் விளக்கினார் .ஆனால் அந்த செய்தி எரிக் கூறியதன் பின் தாமதாகவே பத்திரிகைகளில் வெளியானது, இதன் மூலம் எரிக்கின் மேல் சந்தேக பார்வை விழ தொடங்கியது ,இவருக்கும் கொலை கூட்டத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா பத்திரிகை அல்லது காவல்துறை மூலம் இந்த செய்தியை அறிந்து கொண்டாரா என்று ஆனாலும் பலர் இந்த முன்னறிவிப்பை கண்டு ஆச்சர்யம் கொண்டானர்.

எரிக்கிர்க்கு தொல்லைகள் இல்லாமலும் இல்லை. ஒரு முறை எரிக் கைது செய்யபட்டார் காரணம் எரிக் பணத்தை பெற்று கொண்டு தவறான தகவல்கள், அதாவது இவரது கணிப்ப்புகள் தவறானது என்ற வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யபட்டார். ஆனால் தனக்கு எதிரான இந்த வழக்கின் மூலம் எரிக் எவரும் தொட இயலாத நட்ச்சத்திர அந்தஸ்த்தை பெற்றுவிட்டார்.

செக்கொலோஸ்கியாவில் நடை பெற்ற வழக்கில், எரிக்கின் அசாத்திய ஆற்றல்கள் குறித்த முன்னறிவிப்புகள் குறித்த சந்தேகம் கிளம்பியது, ஆனால் எரிக் வழக்குரைஞரின் சட்டை பையில் இருக்கும் பொருள்களையும் நீதியரசரின் வழக்கு பேழையில் இருந்த பொருள்களையும் மிக சரியாக கூறியபோது நீதியரசர் இவை எரிக்கின் நிகழ்ச்சியில் நடத்தப்படும் கண்கட்டு வித்தை என்று புறந்தள்ளினார் .எரிக் தனது ஆற்றலின் மகத்துவத்தை புரியவைக்க ஒரு திருட்டினை திருடன் நிற்க்குமிடம் போன்றவற்றை துல்லியமாக கூறினார். கமெர்சியல் வங்கியில் கொள்ளையடித்த திருடன் லேய்ட்மேரிட்ஸ் ரயில்வே நிலையத்தில் 2 எண் ரயில்வே பிளாட்பார்மில் நிற்பதகாவும், அவனது கைப்பெட்டியில் இருக்கும் பணத்தையும் பற்றி சரியாக கூறினார். ரயில்வே நிலையம் சென்ற காவலர்கள் அந்த கொள்ளையனை கைது செய்து அழைத்து வந்தனர், எரிக் சொல்லியது போலவே .விடுதலை செய்யப்பட்ட எரிக்கின் புகழ் இந்த நிகழ்வின் பின் இன்னும் அதிகமானது.

மற்றுமொரு முறை பெர்லினில் செயின்ட் ஸ்காலா என்ற இடத்தில் மேடை நிகழ்வை நடத்தியபோது எரிக் கூறிய இன்னொரு முன்னறிவிப்பும் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்து. பாரவையளர்கள் கூட்டத்தில் இருந்த வங்கியாலரிடம் எரிக் அவருடைய வங்கியின் பாதுகாப்பு அறையில் தவறான மின் இணைப்பு காரணமாக தீ பரவபோவதாகவும் 360000 மார்க்ஸ் பணம் சேதமேர்ப்படலாம், என்றும் மிக விரைவாக தீயணைப்பு துறையினை அழைக்குமாறு எரிக் அவரிடம் கூறுகிறார். அந்த வங்கியாளரும் அவ்வாறே செய்ய அங்கு சென்ற தீயணைப்பு குழுவினர் எரிக் கூறியதை போல தவறான மின் இணைப்பு இருப்பதை கண்டு ஆச்சர்யமுற்றனர்.



எரிக்கும் நாஜி படையும்

1930 எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய ஆற்றல் மூலம் கிடைத்த புகழையும் பொருளையும் மூலதனமாக கொண்டு இரண்டு இதழ்களை தொடங்குகிறார். ஹன்னுசின் மேகசின் எனும் மாதந்திர இதழும், மற்றுமொரு இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ், ஒன்றையும் துவங்கி நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது முன்னறிவிப்பு மற்றும் மறைபொருள் குறித்த செய்திகளை இந்த இதழ்களின் மூலம் எரிக் வெளிப்படுத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னறிவிப்பினை வெளியிட்டார். ஜெர்மனியின் பெரும் கூட்டு பங்கு பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகள் சரிவினை சந்திக்கும் என்ற அவரது கணிப்பு அடுத்த மூன்று வாரங்களில் நிஜமானது. ஜெர்மனியின் மிக முக்கிய இரண்டு வங்கிகள் இழுத்து மூடப்பட்டது .

1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எரிக் தனது பத்திரிக்கையில் மேலும் ஒரு செய்தியை வெளியிடுகிறார் "ஹம்பர்க் நகரம் அருகே ரத்த ஆறு ஓடுவதை" தன்னால் காண முடிவாதாக வெளியிட்டார் .சில நாட்களில் ஹாம்பர்க் நகரின் அருகே உள்ள அட்லான நகரில் கம்யுனிஸ்ட் மற்றும் நாஜி படைக்கும் இடையே நடைபெற்ற ஐந்து மணிநேர கோரமான போரில், அட்லான நகரில் ரத்த ஆறு ஓடியது இந்த போர் அட்லானவின் கருப்பு ஞாயிறு என அழைக்கபடுகிறது .எரிக் இதனை தன் தீர்க்கதரிசனம் மூலம் அறிந்து கொண்டார ,அல்லது உயர் அதிகாரிகளின் மூலம் இந்த ரகசியங்களை அறிந்து வெளியிடுகிறாரா, என சந்தேகங்கள் இருந்த போதும் பெரும் பணம்படைத்தவர்கள் எரிக்கின் ஆலோசனையை நாடத்தொடங்கினார். தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள .

இந்த நிலையில் நாஜிக்களின் படையுடன் படையின் முக்கியஸ்தர்களுடன் எரிக் நட்ப்பினை வளர்த்து கொண்டார். மேலும் இவ்வாறு நாஜிக்களுடன் தனது நடப்பை வலுபடுத்தி கொண்டபோதும் . சாமானிய மக்களுடனும் எரிக் நெருங்கி பழகிவந்தார்
சில வரலாற்று அறிஞர்களின் கூற்று படி நாஜிக்களுக்கு ஸ்வஸ்திக் சின்னத்தினை தங்கள் சின்னமாக வைக்கும் படி கூறியது எரிக் தான், இந்துக்களின் இந்த சின்னம் நாஜிக்களுக்கு பெரும் வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியதாகவும் கூறுகின்றனர் .மேலும் தனது இதழ்களில் எரிக் தேர்தலில் கோள்களின் நிலைப்படி ஹிட்லரே மகத்தான வெற்றியை அடைவார் எனவும் ,அவருக்கே காலநிலை சாதகமாக இருப்பதாகவும் எழுதி தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார் .

மேலும் ஜேர்மனிய பத்திரிகையலர்களின் கூற்று ஹிட்லருக்கு மேடை பேச்சிற்கு எரிக்கே மூல காரணம், ஹிட்லருக்கு எரிக் மேடை பேச்சின் நெளிவு சுழிவுகளை பயிற்சி அளித்ததாகவும் கூறுகின்றனர். மேடை நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற எரிக் ஹிட்லருக்கு வார்த்தையை உச்சர்க்கும் விதம் உடல்மொழி போன்றவற்றை பயிற்றுவித்ததாக கூறுகின்றனர். இந்த அசாத்திய பேச்சுத்திறன் மற்றும் தவறான நம்பிக்கையின் காரணமாக ஹிட்லர் தன் தேசத்தையும் இந்த உலகத்தையும் போரை நோக்கி கொண்டு சென்றார். எரிக்கும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தார்.

எரிக்கின் தவறும் மரணமும்

எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார் .அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரானபோது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.

இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது ,வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்

தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும் ,கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும் ,அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.

இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது ,ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர் .இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.

எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை . தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.

மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது .எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது ,எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார். மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.

அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்.

No comments:

Post a Comment